தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் நடைபெறுகிறது
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்க உள்ளது. அதன்படி 431 கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
அதன்படி இன்று முதல் 24ம் தேதி வரை சிறப்பு பிரிவினர்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதாவது 7.5 % இட ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் 121 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீடு, பொதுப்பிரிவு ஆகிய இருபிரிவில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். இதனால் அரசு பள்ளி மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதே போல் பொது மற்றும் தொழிற்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அக்டோபர் 23ம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொறியியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தவிர்க்கும் வகையில் அந்த காலியிடம் 2ம் கட்ட கலந்தாய்வின்போது நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை