ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி EPFO, வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு 67,619.72 கோடி வசூல்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு செய்து பல கோடி வசூலை அள்ளி வருகிறது. அதாவது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பங்குப் பரிவர்த்தனை வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு மட்டுமே தற்போது ரூ.2,26,919.18 கோடியாக வளர்ந்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார். அதாவது, EPFO அமைப்பு பெரும்பாலும் அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி 15%த்தை ETFs களில் முதலீடு செய்கிறது.
அதாவது, கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், தற்போதைக்கு ஈக்விட்டி எக்ஸ்போஷர் வரம்பு 15% முதல் 20% வரைக்கும் அதிகரிக்கலாம் எனவும், பின்னர் 25% வரைக்கும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், EPFO பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் (ETFs) முதலீடு செய்து மொத்தமாக ரூ.67,619.72 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை