அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கல்வித்துறை அமைச்சர் தகவல்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் தேவைப்படுவதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாமல் உள்ளதால் அரசு பள்ளிகளில் சுமார் 13000க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் வரப்போகிற (TNTET) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமாக முதற்கட்டமாக 9494 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டு நிரப்புவதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை