ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் தமிழக முதல்வர் சந்திப்பில் வைக்கப்பட்ட 12 கோரிக்கைகளும் , விமர்சனமும்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடான பேச்சு வார்த்தை நடந்து முடிந்தது. தமிழக முதல்வர்கள் அவர்கள் நமது கோரிக்கைகளை கவனமாக கேட்டறிந்தார் பேச்சுவார்த்தை நம்பிக்கை தரும் வகையில் இருந்ததாக தலைவர்கள் கூறியுள்ளார்கள்
CM Letter-Demands.pdf - Download here
#TATPF#PRESS RELEASE#01.08.2022#
அன்பார்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வணக்கம்.
திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி நமது வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்துவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிக்க வேண்டும்,01.01.2022 முதல் வழங்கப்படவேண்டிய 3% அகவிலைப்படி உயர்வை நிலுவைத்தொகையுடன் வழங்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டு இயக்கம் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் நாள் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக அறிவித்து இருந்த நிலையில்,இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்ததை அடுத்து எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் நாள் நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் இரத்து செய்யப்படுவதாகவும்,ஜாக்டோ ஜியோ சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த அவரிடம் தேதி கேட்டுள்ளதாகவும்,தேதி கிடைத்த பின் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த இருப்பதாகவும் ஜாக்டோ ஜியோ சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இது தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தினால்தான் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நிலைக்கு தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்,கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்திய 50,000 தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு என்பது வெறும் ஏமாற்றம் என்பது தெரியும்.அறவழிப்போராட்டங்கள் மூலமாகவே நமது கோரிக்கைகளை வென்றெடுக்க வாய்ப்பு இருக்கிறது.நன்றி அறிவிப்பு மாநாடு என்பது கடைசியில் ஏமாற்றத்தை தருமேயன்றி கோரிக்கைகளை வெல்ல எந்த வகையிலும் உதவாது என்பதனை பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.நன்றி அறிவிப்பு மாநாடு என்பது ஆட்சியாளர்கள் சொல்லும் நிபந்தனைகளுக்குட்பட்டு நடக்கும்,மாநாட்டில் ஆட்சியாளர்கள் நமது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவிக்காமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது.மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்றைய சந்திப்பின்போது 01.01.2022 முதல் நிலுவைத்தொகையுடன் நமக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை அறிவிக்காமல் இருப்பதற்கு ஏதாவது பொருத்தமான காரணம் சொன்னாரா? உடனடியாக அகவிலைப்படி உயர்வை அறிவிப்பதாக உறுதி கூறினாரா என்பதையும்,மாநாட்டில் நமது வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்கப்படும் என மீண்டும் வாக்குறுதி கொடுத்துள்ளாரா ? என்பதை ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுகிறோம்.மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்கள் மீது ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அளித்துள்ள புகார் அடிப்படையில் மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் மாற்றப்படுவாரா? ,மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்கள் மாற்றப்படவில்லை எனில் நமது கோரிக்கைகளை நிறைவேற்ற மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் தடையாக இருக்க மாட்டார் என்ற உத்தரவாதம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அளிக்கப்பட்டுள்ளதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டுகிறோம்.
இவண்
பா ஆரோக்கியதாஸ்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை
கருத்துகள் இல்லை