ஒரே நாடு & ஒரே தேர்தல் அமல் படுத்த மத்திய அரசு முடிவு..?
இந்தியாவில் கடந்த 1967 ம் ஆண்டு வரை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. இடையில் பல்வேறு கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு 1968 மற்றும் 1969 ம் ஆண்டுகளில் சில மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டது. அதனால் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தனித்தனியாக நடைபெற தொடங்கியது.
ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முறையால் மக்கள் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இரண்டிற்கும் ஒரே நேரத்தில் வாக்களிக்க வேண்டியிருக்கும். இதனால் தேர்தலுக்கான செலவினங்களும் குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் அரசு அலுவலர்களின் பணிகளும் பாதிக்கப்படாது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் ஒரே நாடு ஒரே தேர்தல் தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு & ஒரே தேர்தல் அமல் படுத்த மத்திய அரசு முடிவு..?
Reviewed by Rajarajan
on
20.8.22
Rating:
கருத்துகள் இல்லை