அகவிலைப்படியை (D.A) 01.01.2022 முதல் முன்தேதியிட்டு வழங்கிட வேண்டி தேசிய ஆசிரியர் சங்கம் அறிக்கை
*🔥👉அகவிலைப்படியை (D.A) 01.01.2022 முதல் முன்தேதியிட்டு வழங்கிட வேண்டி தேசிய ஆசிரியர் சங்கம் அறிக்கை*
அகவிலைப்படி அறிவிப்பானது வழக்கமான நடைமுறைதானே... இதனை ஏன் சுதந்திரநாள் உரையின்போது அறிவிக்கவேண்டும்? ஏனென்றால் அத்த உரையினை அனைத்துப் பொதுமக்களும் கவனிப்பார்கள்; அதன் மூலமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான பொதுமக்களின் வெறுப்பை அதிகரிக்கச் செயவதுதானே நோக்கமாக இருக்கவேண்டுமேயன்றி வேறென்ன இருக்கமுடியும்?
இதுல இன்னும் நுட்பமாக பார்க்க வேண்டிய விஷயம்..... மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு என்பது தான்.... மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி உயர்வு என்பது 01.01.2022 முதல் வழங்கப்படுகிறது.... ஆனால் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த 34% அகவிலைப்படி உயர்வு 01.07.2022 முதலே வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..... அதாவது மத்திய அரசு ஊழியர்களை விட அகவிலைப்படியில் ஆறு மாதம் பின்தங்கிய உயர்வு .... இது எப்படி இணையான அகவிலைப்படி உயர்வாக இருக்க முடியும்.... இதை ஊடகங்கள் கேள்வி கேட்குமா???
இதற்கு பெயர்தான் நூதனமான உருட்டு என்பது ....
நிதியமைச்சர் ஒரு பேட்டியில்... "முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை பத்து வருஷமா 1000 ரூபாய் மட்டுமே, ஆனா அரசு ஊழியர்களுக்கு வருஷத்துக்கு 2 முறை DA உயர்வு, இது என்ன சமூக நீதி..?" என்று ஆவேசப்பட்டார். அவர்களுக்கு உயர்த்தித் தருவதை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை.
அதேசமயம் அவரது ஒப்பீடு தவறு. வீட்டிலிருக்கும் முதியோர் மற்றும் விதவைக்கு உதவித்தொகை தருவதும், முழுநேர அரசுப் பணியாளராக பணியாற்றுபவருக்கு அகவிலைப்படி தருவதும் எப்படி ஒன்றாகும்.
அதுசரி... கடந்த ஆறுமாதத்திற்கு எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையை மீதி செய்து, அதில் முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை உயர்த்தியிருக்கிறீரா சமூக நீதிக் காவலரே...?
சரி அவங்களுக்கு உயர்த்தாட்டி போவுது... அவங்களுக்குச் சமமா எங்களுக்குக் குறைச்சிடுங்க... சமூக நீதி சரியா இருக்கும்.
ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு 01.01 2022 முதல் 34% அகவிலைப்படி வழங்கி வருகிறது. ஆனால் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு 01.07.2022 முதல் 34% அகவிலைப்படி வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதாவது... ஆறு மாதம் அகவிலைப்படி நிலுவைத் தொகையாக வழங்க வேண்டிய 973 கோடியே 80 லட்சம் ரூபாய் தமிழக அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.
அதாவது... அரசுச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் போன்ற உயர் அலுவலர்கள் 01.01.2022 முதல் அகவிலைப்படி உயர்வைப் பெறுவார்கள்.
தமிழக நிதி அமைச்சரின் கூற்றுப்படி இதுதான் சமூக நீதி.
கருத்துகள் இல்லை