Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

‘டாஸ்மாக்’ நிறுவனத்தில் 500 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவு

டாஸ்மாக் நிறுவனத்தில் 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ‘டாஸ்மாக் நிறுவனத்தில், 500 இளநிலை உதவியாளர் பணி நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. அதில், கல்வித்தகுதியாக பி.காம் அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பை பெற்றிருக்கவேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செல்வம் என்பவர், வழக்கு தொடர்ந்தார். அதில், ‘அரசு துறையில் உள்ள இளநிலை உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயித்திருக்கும்போது, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மட்டும் பட்டப்படிப்பை கல்வித்தகுதியாக வைத்திருப்பது பாரபட்சமானது. எனவே, இந்த அறிவிப்புக்கு தடை வேண்டும்’ என்று கூறியிருந்தார். 500 பணியிடங்கள் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி உத்தரவிட்டார். இந்த தடையை நீக்க கோரி டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘500 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு 10 ஆயிரத்து 404 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால், ஐகோர்ட்டின் தடை உத்தரவினால், இப்பணியிடத்தை நிரப்ப முடியவில்லை’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார். தடை நீக்கம் அந்த உத்தரவில், ‘மின்சார வாரியம், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இளநிலை உதவியாளர் பதவிக்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பை நிர்ணயித்துள்ளது. எனவே, டாஸ்மாக் நிறுவனம் கல்வித்தகுதி நிர்ணயம் செய்ததில் தவறு இல்லை. மனுதாரர் அந்த கல்வித்தகுதி இல்லாததால், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இவரது கோரிக்கையை ஏற்க முடியாது. அதனால், 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.
‘டாஸ்மாக்’ நிறுவனத்தில் 500 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவு ‘டாஸ்மாக்’ நிறுவனத்தில் 500 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவு Reviewed by Rajarajan on 21.2.19 Rating: 5

கருத்துகள் இல்லை