Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பி.காம் படித்த மாணவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்ய ஓர் அறிய வாய்ப்பு.


நேஷனல் ஃபெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தில் 


அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்ட் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நொய்டாவில் உள்ள நேஷனல் ஃபெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தில் 
வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்ட்
காலிப்பணியிடங்கள்:  52

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 31/01/2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28/02/2019, மாலை 05.30 மணி வரை


மாதம் ரூ.9,000 முதல் ரூ.16,400 வரை

18 முதல் 30 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான தேர்வுக் கட்டணம்: ரூ. 200
எஸ்.சி, எஸ்.டி, PWD, முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை

ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.
செலுத்திய தேர்வுக் கட்டணத்தை மீண்டும் திரும்ப பெற இயலாது.

அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்ட் என்ற பணிக்கு, பி.காம் பட்டப்படிப்புடன் பொதுப்பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினர் 50% தேர்ச்சியும், எஸ்.சி / எஸ்.டி / PwBD பிரிவினர் 45% தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.

1. முதலில் NFL இன் - www.nationalfertilizers.com - என்ற இணையதளத்தில் சென்று, அதில் Careers - ஐ கிளிக் செய்யவேண்டும்.
2. பிறகு Recruitment in NFL - ஐ கிளிக் செய்தால் அதில் Recruitment of Accounts Assistant-2019 வரும். அதனுள் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.


பி.காம் படித்த மாணவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்ய ஓர் அறிய வாய்ப்பு. பி.காம் படித்த மாணவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்ய ஓர் அறிய வாய்ப்பு. Reviewed by Rajarajan on 10.2.19 Rating: 5

கருத்துகள் இல்லை