Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவில் நியூக்லியர் ரிசர்ச் அண்ட் இன்ஜினியரிங் ஸ்காலர்ஷிப்...!


அணுவியல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் இந்திய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த ‘ரஷ்யன் ஸ்டேட் அடாமிக் எனர்ஜி கார்ப்ரேஷன்’ எனப்படும் ரோஸ்டாம் நிறுவனத்தால் வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் இது!

பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு, அணுவுலை சார்ந்த உபகரணங்களை தயாரித்து வழங்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று இந்த ரோஸ்டாம் நிறுவனம். அணு ஆராய்ச்சி மற்றும் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் முழு உதவித்தொகையுடன் உயர்கல்வி வழங்குவதன் மூலம் அத்துறை சார்ந்த வல்லுநர்களை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

தகுதிகள்:
இந்தியாவை சேர்ந்த இளநிலை அல்லது முதுநிலை படிக்கும் மாணவராக இருக்க வேண்டும். ரஷ்யாவில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் ‘நியூக்லியர்-எனர்ஜி’ சார்ந்த படிப்பை தேர்வு செய்து விண்ணப்பித்து அந்த கல்வி நிறுவனத்திடமிருந்து அழைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

துறைகள்:
 நியூக்லியர் பவர் இன்ஜினியரிங் அண்ட் தெர்மல் பிசிக்ஸ்
 நியூக்லியர் ரியாக்டர்ஸ் அண்ட் மெட்டீரியல்ஸ்
 நியூக்லியர் பவர் பிளாண்ட்ஸ்: டிசைன், ஆப்ரேஷன் அண்ட் இன்ஜினியரிங்
 நியூகிலியர் பவர் இன்ஸ்டாலேஷன்ஸ் அண்ட் ஆப்ரேஷன்
 நியூக்லியர் மெடிசன்
 நியூக்லியர், தெர்மல் அண்ட் ரெனவபில் எனர்ஜி அண்ட் ரிலேடட் டெக்னாலஜீஸ்

உதவித்தொகைகள்:
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் இருந்து முழு விலக்கு வழங்கப்படும். மேலும், ரஷ்ய மொழிப் பயிற்சியுடன் தங்கும் வசதிகளும் செய்து தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
இந்த உதவித்தொகை திட்டத்திற்கென அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ள வலைத்தளத்தின் மூலம் மட்டுமே மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 15

விபரங்களுக்கு: https://russia.study/en
இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவில் நியூக்லியர் ரிசர்ச் அண்ட் இன்ஜினியரிங் ஸ்காலர்ஷிப்...! இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவில் நியூக்லியர் ரிசர்ச் அண்ட் இன்ஜினியரிங் ஸ்காலர்ஷிப்...! Reviewed by Rajarajan on 12.2.19 Rating: 5

கருத்துகள் இல்லை