சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலவச பயிற்சி-திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையில்
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையில் ,எரிசக்தி அமைச்சகம் சார்பில், மாடியில் சோலார் மின் உற்பத்தி செய்ய இலவச பட்டய பயிற்சி மார்ச் 1 முதல் அளிக்கப்பட உள்ளது.மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம் சார்பில் 2022 க்குள் 40 ஜிகாவாட் திறன் கொண்ட சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 8 இடங்களில் தன்னார்வ லர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலையில் மார்ச்1 ல் துவங்கி 10 நாட்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதில், சோலார் பேனல்களை மின்கட்டமைப்புடன் இணைப்பது, சூரிய மின்தகடுகளை மாடிமேல் பொருத்துவது, மின் அமைப்பு, வரை படங்களை உருவாக்குதல், சோலார் பேனல் பொருத்த, அங்கீகாரம் பெற பயிற்சி அளிக்கப்படும்.
பொறியியல் படித்தவர்கள், 5 ஆண்டுகள் தொழிற்சாலை அனுபவம், சூரிய மின்சக்தி தொழில் முனைவோர், மூத்த எரிசக்தி துறை, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பிப்.25 க்குள் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களுக்கு 96263 02737 ல் பேசலாம். கிராமிய எரிசக்தி மைய இயக்குனர் கிருபாகரன் கூறியது: சோலார் பேனல் பொருத்த 30 சதவீதம் வரை அரசு மானியம் வழங்குகிறது. வீட்டில் ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் பொருத்தி தினமும் 5 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும், என்றார்.
சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய இலவச பயிற்சி-திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையில்
Reviewed by Rajarajan
on
21.2.19
Rating:
கருத்துகள் இல்லை