‘இந்தியன் ஸ்டேடிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட்’ (ஐ.எஸ்.ஐ.,) கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகள்
புள்ளியியல் படிப்பிற்காக மத்திய அரசால் நிறுவப்பட்ட ‘இந்தியன் ஸ்டேடிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட்’ (ஐ.எஸ்.ஐ.,) கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
படிப்புகள்:
பேச்சுலர் ஆப் ஸ்டேடிஸ்டிக்ஸ் (பி.ஸ்டாட்.,) மற்றும் பேச்சுலர் ஆப் மேத்மெடிக்ஸ் (பி.மேத்.,) - 3 ஆண்டுகள்
மாஸ்டர் ஆப் ஸ்டேடிஸ்டிக்ஸ் (எம்.ஸ்டாட்.,) மற்றும் மாஸ்டர் ஆப் மேத்மெடிக்ஸ் (எம்.மேத்.,) - 2 ஆண்டுகள்
எம்.எஸ்., இன் குவாண்டிடேடிவ் எக்னாமிக்ஸ் (எம்.எஸ்.கியூ.இ.,), எம்.எஸ்., இன் குவாலிட்டி மேனேஜ்மெண்ட் சயின்ஸ் (எம்.எஸ்.,கியூ.எம்.எஸ்.,) மற்றும் எம்.எஸ்., இன் லைப்ரரி அண்ட்
இன்பர்மேஷன் சயின்ஸ் (எம்.எஸ்.எல்.ஐ.எஸ்.,) - 2 ஆண்டுகள்
எம்.டெக்., இன் கம்பியூட்டர் சயின்ஸ் (எம்.டெக்.சி.எஸ்.,), எம்.டெக்., இன் கிரிப்டாலஜி அண்ட் செக்யூரிட்டி (எம்.டெக்.சிஆர்.எஸ்.,) மற்றும் எம்.டெக்., இன் குவாலிட்டி, ரிலயப்லிட்டி அண்ட் ஆபரேஷன்ஸ் ரிசர்ச் (எம்.டெக்.கியூ.ஆர்.ஓ.ஆர்.,) - 2 ஆண்டுகள்
போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் கம்பியூட்டர் அப்ளிகேஷன்ஸ் (பி.ஜி.டி.சி.ஏ.,) மற்றும் போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் ஸ்டேடிஸ்டிக்கல் மெதட்ஸ் அண்ட் அனலடிக்ஸ் (பி.ஜி.டி.சி.எம்.ஏ.,) - 1 ஆண்டு
ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப்
தகுதிகள்:
இளநிலை பட்டப்படிப்பிற்கு 12ம் வகுப்பு முடித்தவராகவும், முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்புகளுக்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஐ.எஸ்.ஐ., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மட்டுமே மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய முடியும்.
சேர்க்கை முறை:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் பெறும் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 12
தேர்வு நாள்: மே 12
விபரங்களுக்கு: www.isical.ac.in
‘இந்தியன் ஸ்டேடிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட்’ (ஐ.எஸ்.ஐ.,) கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை படிப்புகள்
Reviewed by Rajarajan
on
17.2.19
Rating:
கருத்துகள் இல்லை