Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

SSC(T) (Short Service Commission Technical course) இந்திய ராணுவத்தில் B.E / B.TECH படித்தவர்களுக்கு வேலை!


SSC(T) (Short Service Commission Technical course)


பொறியியல் படித்தவர்களுக்கு  இந்திய ராணுவத்தில், Short Service Commission Technical course பயிற்சியுடன் கூடிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் வாய்ந்த திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலிப்பணியிடங்கள்: 

SSC (Tech) -53 ஆண்கள் - 175
SSCW (Tech) -24 பெண்கள் - 14
SSCW (Tech & Non Tech) widows of Defence personnel - 02
மொத்தம் = 191 காலிப்பணியிடங்கள்.

பயிற்சிகால அளவு:  49 வாரங்கள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.02.2019

வயது வரம்பு: 

i. SSC (Tech) -53 ஆண்கள் மற்றும் SSCW (Tech) -24 பெண்கள்: 20 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும். 02.10.1992 முதல் 01.10.1999-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

ii. SSCW (Tech & Non Tech) widows of Defence personnel : அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 

பி.இ / பி.டெக் படித்த அல்லது கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கும், அனைத்து பொறியியல் பட்டதாரிகளும் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
(சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், ஏரோனாடிக்ஸ், கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகாம், பவர் எலக்ட்ரானிக்ஸ் & டிரைவ்ஸ், புரொடக்‌ஷன் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்‌ஷர் இன்ஜினியரிங்) 

முக்கிய குறிப்பு: 


* உடற்தகுதி: நல்ல உடல் மற்றும் மனநலத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். 
உடல் எடை மற்றும் உயரம்: ஆண்கள்: 157.5 செ.மீ உயரத்திற்கு தகுந்த எடையும், பெண்கள்: 152 செ.மீ உயரத்துடன், 42 கிலோ எடையும் இருத்தல் வேண்டும்.
* உடலில் எந்தப் பாகத்திலும் பச்சைக்குத்தி இருக்கக்கூடாது.
* தேர்வுக்கட்டணம் கிடையாது.

* பயிற்சியின் போது, பயிற்சி பெறுபவர்கள் திருமணம் செய்யக்கூடாது. அப்படி செய்பவர்கள் பயிற்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
* இந்தப் பயிற்சிக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.
* கடைசி வருடம் பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், தங்களது பட்டப்படிப்பு நிறைவு சான்றிதழை 01.10.2019-க்குள்ளும், மதிப்பெண் / பட்டப்படிப்பு சான்றிதழ்களை பயிற்சியில் சேர்ந்த பின்பு 12 வாரங்களுக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்காதவர்கள் பயிற்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
* பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு, சென்னை பல்கலைக் கழகத்தின் மூலம் ' Post Graduate Diploma in Defence Management and Strategic Studies' - என்ற பட்டம் வழங்கப்படும்.






SSC(T) (Short Service Commission Technical course) இந்திய ராணுவத்தில் B.E / B.TECH படித்தவர்களுக்கு வேலை! SSC(T) (Short Service Commission Technical course) இந்திய ராணுவத்தில் B.E / B.TECH படித்தவர்களுக்கு வேலை! Reviewed by Rajarajan on 10.2.19 Rating: 5

1 கருத்து