Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளிக்கல்வி/ உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை அறிவிப்பு முழு விவரம்


*பள்ளிக் கல்வித்துறையில் 24 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்.*

*அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து செய்யப்படும்.*

*88 கல்வி மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் விரைவில் திறக்க திட்டம் விரிவுபடுத்தப்படும்*

*எழுத படிக்க தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை கல்வியை பயிற்றுவிக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.*



*அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.12.39 கோடியில் ஒருங்கிணைந்த நலவாழ்வு திட்டம் கொண்டுவரவும், 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை 6 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரமாக உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.*

*மேலும், எஸ்.எம்.எஸ் மூலம் மாணவர்களின் வருகையை தெரிவிக்க ரூ.1 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.*

*2019 - 2021 இல் சிறப்பு பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வித்திட்டம் 6.23 கோடியில் செயல்படுத்தப்படும்*

 *கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் ஒரு கோடியில் மின் ஆளுமை திட்டம் செயல்படுத்தப்படும்*

*அண்ணாமலை பல்கலைகழகத்தில் 2.34 கோடி செலவில் அடைகாப்பு மையம் உருவாக்கப்படும்.*

* 50 லட்சம் மதிப்பீட்டில் இணையவழி மூலம் பாடம் நடத்த திட்டம்*

 *91 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி மற்றும் தேர்வு மையங்கள் உருவாக்கப்படும்*

* வெளிநாட்டு பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு 100 மாணவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு*



* பட்டதாரி மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த கலந்தாய்வுக் கூட்டங்கள், கோவை சேலம் திருச்சி மதுரை நெல்லை -தலா ரூபாய் 20 லட்சம் செலவில் கலந்தாய்வு கூடம் உருவாக்க திட்டம் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பள்ளிக்கல்வி/ உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை அறிவிப்பு முழு விவரம் பள்ளிக்கல்வி/ உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை அறிவிப்பு முழு விவரம் Reviewed by Rajarajan on 2.7.19 Rating: 5

கருத்துகள் இல்லை