Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

படிக்க வந்த அரசு பள்ளி மாணவர்களை பனை மட்டை வெட்ட அனுப்பிய ஆசிரியர்கள் - கல்வி அதிகாரிகள் விசாரணை



Was

மாணவர்களை பனை மட்டை வெட்ட ஆசிரியர்கள் அனுப்பிய சம்பவம் சாலைக்கிராமம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1961ம் ஆண்டு முதல் உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு 1979ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் இயங்கி வருகின்றன. சுமார் 560 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

நேற்று காலை 9.30 மணியளவில் வடக்கு சாலைக்கிராமம் வயல்காட்டிற்குள் மழையில் நனைந்தபடி இப்பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் வந்துள்ளனர். ஒரு மாணவர் கையில் அரிவாள் வைத்திருந்ததால், வயல் பகுதியில் வேலை செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 


இதுகுறித்து மாணவர்களிடம் அவர்கள் விசாரித்தனர். அதற்கு அவர்கள், பள்ளியில் மாணவர்களை அடிப்பதற்கு ஆசிரியர்கள் பனை மட்டை வெட்டி வரச் சொல்லி அனுப்பியதாகவும், அதனால் பனை மரத்தை தேடுவதாகவும் கூறியுள்ளனர். அரை மணிநேரம் தேடி அலைந்த இரு மாணவர்களும், பச்சை மட்டை கிடைக்காததால், காய்ந்த பனை மட்டையை வெட்டி எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றனர்.


இதுகுறித்து பள்ளியின் முன்னாள் மாணவர் மணிவண்ணன் கூறுகையில், ``கல்விப் பணியில் நல்ல பெயரெடுத்த இந்த பள்ளியில் அதை களங்கப்படுத்தும் விதமாக சில ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.  சில ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. ஆனால், கல்வித்துறை அதிகாரிகள் கன்டு கொள்வதே இல்லை. பாதுகாப்பற்ற நிலையில் மாணவர்களை பனை மட்டை வெட்ட அனுப்பியது பாதகமான செயல். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கல்வித்துறை  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

படிக்க வந்த அரசு பள்ளி மாணவர்களை பனை மட்டை வெட்ட அனுப்பிய ஆசிரியர்கள் - கல்வி அதிகாரிகள் விசாரணை படிக்க வந்த அரசு பள்ளி மாணவர்களை பனை மட்டை வெட்ட அனுப்பிய ஆசிரியர்கள் - கல்வி அதிகாரிகள் விசாரணை Reviewed by Rajarajan on 24.11.19 Rating: 5

கருத்துகள் இல்லை