பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்களில் பிழை இருந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் மீது கடும் நடவடிக்கை... தேர்வுகள் இயக்குனரகம்
Was
பொது தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, அரசு தேர்வு துறை சேகரித்து வருகிறது. பள்ளிகள் தரப்பில் பதிவு செய்யப்பட்ட மாணவர் விபரங்களை, சரிபார்க்க அவகாசமும் அளிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழியாக, அரசு தேர்வு துறை, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், மாணவர்களின், 'இனிஷியல்' எனப்படும், பெற்றோர் பெயரின் முதல் எழுத்து, ரத்தப்பிரிவு என, அனைத்து விபரங்களையும், தவறின்றி பதிவு செய்ய வேண்டும். பத்தாம்வகுப்பு சான்றிதழ்களின் அடிப்படையில், விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு சான்றிதழுக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அளிக்கும் விபரங்களிலும், தவறுகள் இருந்தால், தலைமை ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அரசு தேர்வு துறை எச்சரித்துள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்களில் பிழை இருந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் மீது கடும் நடவடிக்கை... தேர்வுகள் இயக்குனரகம்
Reviewed by Rajarajan
on
18.11.19
Rating:
கருத்துகள் இல்லை