பொதுத்தேர்வுத்தாளில் மாணவர்களின் பெயர் எழுதலாம் - பள்ளிக் கல்வித் துறை
பொது தேர்வில் புதிய சலுகையை வழங்கிய அரசு.! மகிழ்ச்சியில் மாணவர்கள்.!
வரும் 2020ல் நடக்க இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தங்களுடைய பெயரை தேர்வுத் தாளில் எழுத, வசதி ஏற்பட்டு இருக்கின்றது.இதுவரை பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாளில் தேர்வு எண் மட்டுமே எழுத வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அதில் மாணவர்களின் பெயரோ அல்லது பாலினமோ குறிப்பிடப்படமாட்டாது.
மேலும் பெயர் குறிப்பிட்டு இருந்தால் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தவறு செய்ய நேரிடும் என்பதன் காரணமாகவே, இந்த முறை பின்பற்றப் படாமல் இருந்துள்ளது. தற்போது இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020ல் நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தங்களது பெயரை எழுத ஆங்கிலத்தில் 34 எழுத்துகள் எழுதும் வகையிலும், தமிழில் 45 எழுத்துகள் வரை எழுதும் வகையிலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.கூடுதல் இடம் தேவைப்பட்டால், அவற்றையும் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுத்தாளில் மாணவர்களின் பெயர் எழுதலாம் - பள்ளிக் கல்வித் துறை
Reviewed by Rajarajan
on
23.11.19
Rating:
Reviewed by Rajarajan
on
23.11.19
Rating:


கருத்துகள் இல்லை