வாட்ஸ்ஆப் கணக்கிற்குள் ஹேக்கர்கள் ஊடுருவல், மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை...
வாட்ஸ்ஆப் தகவல்கள் திருடப்படுவது குறித்து, வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமானோரின், குறிப்பாக இந்திய பிரபலங்கள் பலரின் வாட்ஸ்ஆப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பாக சம்பவங்களுக்கு இந்திய ஒப்புதல் கழகம், வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய கணினி அவசரகால பதிலளிக்கும் குழு ( Indian Computer Emergency Response Team-CERT-In) விடுத்துள்ள எச்சரிக்கையில், வாட்ஸ்ஆப் பயனாளர்கள் செய்யும் சிறிய தவறுகளால் ஹேக்கர்களால் எளிதில் அவர்களின் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போனிற்குள் புகுந்து, அதை ரிமோட் மூலம் அவர்களால் இயக்க முடியும். CERT-In எச்சரிக்கையின் முழு விபரம் : பொதுவாக MP4 பைல்கள் மூலமே வாட்ஸ்ஆப்பிற்குள் ஹேக்கர்கள் ஊடுருவுகிறார்கள். MP4 பைல் என்பது வீடியோ, ஆடியோ மற்றும் டாக்குமென்ட் பைல்களை உள்ளடக்கியது. இந்த MP4 பைல்களை வாட்ஸ்ஆப் வாடிக்கையாளர்களால் டவுண்லோட் செய்யப்படும் போதும் மட்டுமே, மால்வேர்களை பயன்படுத்தி ஹேக்கர்களால் உள்ளே நுழைய முடியும். வாட்ஸ்ஆப்பில் உள்ள இந்த பாதுகாப்பு ஓட்டையை வைத்து பயனாளர்களின் மொபைல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை உளவு பார்ப்பதுடன். முக்கிய தகவல்களையும் திருடுகிறார்கள். ஒருமுறை ஒருவரின் வாட்ஸ்ஆப் கணக்கிற்குள் ஹேக்கர்கள் ஊடுருவி விட்டால், அந்த போன் வைத்திருக்கும் நபர் இருக்கும் இடத்தை கூட ஹேக்கர்களால் தெரிந்து கொள்ள முடியும். வாட்ஸ்ஆப்பின்
Android prior to v2.19.134; WhatsApp Business for Android prior to v2.19.44;
WhatsApp for iOS prior to v2.19.51; WhatsApp Business for iOS prior to v2.19.51;
WhatsApp for Windows Phone prior to v2.18.348; and WhatsApp for Tizen prior to v2.18.15 ஆகியவையே பெருமளவில் பாதுகாப்பு சிக்கலுக்கு ஆளாகக் கூடியன. வாட்ஸ்ஆப்பில் இத்தகைய பாதுகாப்பு குறைபாடு உள்ளதை கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனமும் எச்சரித்திருந்தது. ஒரு தொலைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்படும் RTCP வரிசையிலான ரிமோட் கோட் (remote code) பயன்படுத்தியே அந்த போன் ஹேக் செய்யப்படுவதாக பேஸ்புக் கூறி இருந்தது. ஒருவரிடம் இருந்து வாட்ஸ்ஆப்பிற்கு வரும் MP4 அல்லது போட்டோக்களை நாம் விரும்பினால் மட்டுமே டவுண்லோடு செய்து கொள்ள முடியும். நாம் விரும்பாவிட்டால் அந்த குறிப்பிட்ட பைல் நமது மொபைல்போனில் டவுண்லோடு ஆகாது. அதே சமயம் அவற்றை திறந்து நம்மால் பார்க்க முடியும். ஒரு பைலை நாம் திறந்ததும், அது தாமாக டவுண்லோடு ஆகி, நமது போன் மெமரிக்கு செல்வதை தடுப்பதற்கான வசதியை வாட்ஸ்ஆப் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. MP4 பைல்களால் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளை கணக்கில் வைத்தே இத்தகைய வசதியை வாட்ஸ்ஆப் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
வாட்ஸ்ஆப் கணக்கிற்குள் ஹேக்கர்கள் ஊடுருவல், மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை...
Reviewed by Rajarajan
on
19.11.19
Rating:
கருத்துகள் இல்லை