கோவை முதன்மைக் கல்வி அலுவலரின் அசரடிக்கும் - அட்டகாசமான - அற்புதமான - ஆகச்சிறந்த குழந்தைகள் தின சிறப்புப் பரிசு!
கோவை முதன்மைக் கல்வி அலுவலரின் அசரடிக்கும் - அட்டகாசமான - அற்புதமான - ஆகச்சிறந்த குழந்தைகள் தின சிறப்புப் பரிசு!
5 - 8-ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கான பள்ளி வேலை நேரம் காலை 8:30 முதல் மாலை 5:20 வரை 8மணி நேரம் 50 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் தினமொரு பாடத்தில் தேர்வு என்ற அடிப்படையில், அனைத்துப் பள்ளி வேலைநாள்களிலும் நாள்தோறும் மாலை 4:30 மணிக்கு எழுதோனும் 25 மதிப்பெண்ணிற்கான சிறு தேர்வூவூவூவூ!
இதற்கிடையே 60 மதிப்பெண்களுக்கான வழக்கமான பருவத் தேர்வுகளும், பொதுத் தேர்வுகளும் உண்டூடூடூடூடூ!
ஆகமொத்தம், 5 - 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் ஒரு வருடத்தின் 210 பள்ளி வேலைநாள்களிலும் தேர்வுகளை எதிர்கொண்டாக வேண்டிய ஆகச்சிறந்த குழந்தைநேய முறை இனிதே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
5 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 10 - 13 வயது குழந்தைகள் 4 வருடங்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 840 பள்ளி வேலைநாள்களிலும்,
காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு என 50 தேர்வுகளையும். . .
10 பொதுத் தேர்வுகளையும். . .
780 சிறு தேர்வுகளையும் எழுதியாக வேண்டும்!
குழந்தை நல உளவியலை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு, 10 முதல் 13 வயதுடைய குழந்தைகளை வருடத்தின் அனைத்து நாள்களிலும் தேர்வு எனும் அச்சத்திலேயே வாழவைத்து நாளது தேதிவரை இல்லாத ஆகச் சிறந்த புதிய சமுதாயத்தை தமிழகத்திற்குப் படைத்தளிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை நாமும் வாழ்த்துவோமாக!
So. . . பிள்ளீங்ளா Sweet எடுங்க கொண்டாடுங்க!
கோவை முதன்மைக் கல்வி அலுவலரின் அசரடிக்கும் - அட்டகாசமான - அற்புதமான - ஆகச்சிறந்த குழந்தைகள் தின சிறப்புப் பரிசு!
Reviewed by Rajarajan
on
17.11.19
Rating:
கருத்துகள் இல்லை