Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஒரே அரசாணை.. கதிகலங்கும் தனியார் பள்ளிகள்.. மாஸ் காட்டிய கல்வித்துறை .!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிரடி அரசானையால் தனியார் பள்ளிகள் கதிகலங்கி உள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது.


அதே போல இதுவரை பள்ளிகளில்வியின் 10,11,12_ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு நேரம் 2.30 மணி_யாக இருந்தது மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக 30 நிமிடம் சேர்த்து 3 மணி நேரமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய பாடத்திட்டம் வந்துள்ளதால் கூடுதலாக தேர்வு நேரத்தை ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று இந்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வில் கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சிக்கு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆங்கிலப்பேச்சு திறன் பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் சொல்லப் படுகின்ற்றது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளிலும் SPOKEN ENGLISH பயிற்சி என்பதால் தனியார் பள்ளிகள் கதிகலங்கி உள்ளனர்.
ஒரே அரசாணை.. கதிகலங்கும் தனியார் பள்ளிகள்.. மாஸ் காட்டிய கல்வித்துறை .!! ஒரே அரசாணை.. கதிகலங்கும் தனியார் பள்ளிகள்.. மாஸ் காட்டிய கல்வித்துறை .!! Reviewed by Rajarajan on 26.11.19 Rating: 5

கருத்துகள் இல்லை