Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

10ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வாகும் மாணவர்களுக்கு 11, 12ம் வகுப்பு படிக்கையில் மாதம் ரூ.1,250, முதுநிலை படிக்கும்போது மாதம் ரூ,2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 2022 ஜனவரி மாதம் 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டண தொகை ரூ.50 சேர்த்து சம்மந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.11.2021 ஆகும். மேலும் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு 10ம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு Reviewed by Rajarajan on 8.11.21 Rating: 5

கருத்துகள் இல்லை