Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவ.30 வரை அமல் - அரசு அறிவிப்பு!

 

தமிழகத்தில் கொரோனா தாக்கம், வடகிழக்கு பருவமழை, டெங்கு பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் 10ம் தேதி மாநிலம் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதனால் தொழில் நிறுவனங்கள், வர்த்தகங்கள், கடைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடபட்டது. பொது மக்கள் வெளியே செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு மக்களின் அன்றாட தேவைகளுக்காக அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி வழங்கியது. மேலும் அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது.


அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது. நோய் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக 18 வயது மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 30,000 கும் அதிகமாக இருந்து தொற்று பரவல் 3 ஆயிரமாக குறைந்தது. இதனால் அரசு மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மருத்துவ துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது.


அதன் தொடர்ச்சியாக நோய் பரவல் சூழலை கருத்தில் கொண்டு அவ்வப்போது அரசு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதாலும் அதனை தொடர்ந்து தேங்கியுள்ள மழைநீரால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவுவதாலும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக குறையாததாலும் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவ.30 வரை அமல் - அரசு அறிவிப்பு! தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவ.30 வரை அமல் - அரசு அறிவிப்பு! Reviewed by Rajarajan on 18.11.21 Rating: 5

கருத்துகள் இல்லை