Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு - அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 

பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு – அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு கருதி கோவை மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பள்ளி மாணவ மாணவிகள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

தற்போதைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. குழந்தை முதல் குமரி வரையிலானவர்களுக்கு அவ்வப்போது பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. சமீபத்தில் கோவையில் பள்ளி மாணவி ஆசிரியரால் பாலியல் தொந்தரவு செய்யப்பதை தொடர்ந்து மாணவி தற்கொலை செய்தது பரவலாக பேசப்பட்டது. எனவே பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பலரும் கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.



தற்போது கோவை மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதனால் சிறப்பு வகுப்புகள் முடிந்த பின் மாலை 5:30 மணிக்குள் மாணவர்களை வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்றும் மாணவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவதை பள்ளி முதல்வர், நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே போல் மாணவிகள் செல்லும் பள்ளி பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் அதே சமயம் அவை இயங்குவதை பள்ளியின் முதல்வர் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு ஆப் லைன் வகுப்பு நடைபெறும் போது பள்ளி ஆசிரியைகள் உடன் இருப்பதை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்த வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு - அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு - அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! Reviewed by Rajarajan on 18.11.21 Rating: 5

கருத்துகள் இல்லை