Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNPSC குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு விரைவில், பாடத்திட்டம் அறிவிப்பு

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்த தேர்வுக்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களுக்கான பாடத்திட்டத்தை TNPSC வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகுபவர்கள் இந்த பாடத்திட்டத்தை பார்த்து தயாராகுங்கள்.

தமிழக அரசுத்துறைகளில் 4 ஆம் நிலை பதவிகளை நிரப்ப TNPSC ஆல் நடத்தப்படும் தேர்வே குரூப் 4 தேர்வு. இதில் சில ஆண்டுகளுக்கு முன் விஏஓ பதவிகளுக்கான தேர்வும் சேர்த்தே நடத்தப்படுகிறது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே நீங்கள் இந்த தேர்வை எழுதலாம். அதுவும் ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே. எழுத்து தேர்வு கொள்குறி வகை அடிப்படையிலானது. விரிவான எழுதுதல் தேர்வு கிடையாது. இந்த எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் நீங்களும் அரசு அதிகாரி தான். மேலும் குருப் 4 தேர்வுகளில் உள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் உங்கள் சொந்த மாவட்டத்திற்குள்ளாகவே வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

பதவிகள்

TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)

கல்வித் தகுதி

அனைத்து பதவிகளுக்கும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி

இத்தேர்விற்க்கான வயது தகுதி பொதுபிரிவினருக்கு 18 முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு.

மேலும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை

குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். மொழிப்பாடம் மற்றும் பொது அறிவு என வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.

பாடத்திட்டம்

முதல் பகுதியான மொழிப்பாடப்பிரிவில் இதுவரை, தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் 100 வினாக்கள் இடம்பெறும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.



அடுத்ததாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75- பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.

தற்போது TNPSC, குரூப் 4 தேர்வுக்கான தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களுக்கான பாடத்திட்டத்தின் பாடக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள், கீழ்கண்ட இணையதளப் பக்கத்தில் உள்ள பாடத்திட்டத்தை பார்த்து பயன் பெறுங்கள்

இணையதள முகவரி: https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/new_syllabus_CCSE_IV_Gruop_IV_VAO_Tamilversion.pdf

TNPSC குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு விரைவில், பாடத்திட்டம் அறிவிப்பு TNPSC குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு விரைவில், பாடத்திட்டம் அறிவிப்பு Reviewed by Rajarajan on 14.11.21 Rating: 5

கருத்துகள் இல்லை