தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய அரசாணை ரத்து? ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் கொண்டு வந்த கல்வி ஊக்க ஊதிய ஆணையை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் வழங்கப்பட்டது தான் உயர்கல்விக்கான ஊக்கத்தொகை. இந்த ஊக்கத்தொகை கடந்த ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஊக்க ஊதியம் மீண்டும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள கல்வி ஊக்க ஊதியத்தை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது மத்திய அரசு அரசாணையில் பணி நியமனத்துக்கு முன் பெற்ற உயர்கல்விக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட மாட்டாது என்றும் பணி நியமனத்துக்கு பின்னர் பணி உயர்வு சம்பந்தமாக படிக்கும் உயர்கல்விக்கு மட்டுமே ஊக்க ஊதியம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த அரசாணையை ஆசிரியர்கள் எதிர்த்து வருகின்றனர். மேலும் தமிழக அரசு இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி கடந்த செப்.18ம் தேதி கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் ஆசிரியர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஊக்க ஊதியத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அரசு ஊழியர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை அரசாணை ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதனால் பணி நியமனத்துக்கு பின் தங்களது அறிவுசார் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் போய்விடும். எனவே தமிழக அரசு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யுமாறு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை