Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வுடன் வீட்டு வாடகைப்படி HRA உயர்ந்தது



மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1, 2021 முதலான வீட்டு வாடகை படி சேர்த்து வழங்கப்பட உள்ளது. இதனுடன் சேர்த்து ஜனவரி 2022 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.மத்திய அரசு கடந்த மூன்று தவணைகளாக தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய படிகளை பொருளாதார சிக்கலினால் நிறுத்தி வைத்தது. மேலும், அனைவரின் கோரிக்கையின் படி கடந்த ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு மற்றும் DR உயர்வு வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது. இதனால் 17% ஆக இருந்த DA 28% ஆக அதிகரிக்கப்பட்டது. அகவிலைப்படி உயர்வுடன் தொடர்புடைய மற்ற பலன்களும் ஊழியர்களுக்கு அதிகரித்தது. இதனால் ஊழியர்களின் மாத ஊதியம் அதிகமாக கிடைத்தது. DA உடன் தொடர்புடைய வீட்டு வாடகை படியும் தற்போது செப்டம்பர் மாதம் முதல் அதிகரித்துள்ளது.


கடந்த 2017ம் ஆண்டு மத்திய செலவினத்துறை, DA உயர்வு 25% ஐ தாண்டும் போது வீட்டு வாடகைப்படி (HRA) உயர்த்தப்படும் என்று அறிவித்தது. தற்போது DA 28% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 1, 2021 முதல் 11.56 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டு வாடகை படி நகரங்களுக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள படி அதிகரிக்கப்படும். X, Y மற்றும் Z என்று வகைப்படுத்தப்பட்ட நகரங்களுக்கு முறையே அடிப்படை ஊதியத்தில் 27%, 18% மற்றும் 9% ஆகும். 50லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம் X வகை என்றும், 5 லட்சத்திற்கு அதிகம் உள்ள நகரம் Y வகை என்றும் மக்கள் Z வகை நகரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகளுக்கு உட்பட்டு IT சட்டம், 1961 இன் பிரிவு 10 (13A) இன் கீழ் வீட்டு வாடகை படிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கான HRA விலக்கு கணக்கீடு அடிப்படை சம்பளத்தில் 50% மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிப்பவர்களுக்கு 40% ஆகும். வீட்டு வாடகை அலவன்ஸ் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 40% அல்லது 50% ஆக இருக்கும். 7வது ஊதியக் குழுவின் படி, ஒவ்வொரு நிலைப் பணியாளரின் சம்பளமும் அவர்களின் அகவிலைப்படி மற்றும் வீட்டுவாடகை அலவன்ஸ் அதிகரிப்புடன் சேர்ந்து மேலும் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜனவரி 2022 முதல் வழங்க உள்ள DA உயர்வு குறித்தான ஆலோசனைகளும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வுடன் வீட்டு வாடகைப்படி HRA உயர்ந்தது மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வுடன் வீட்டு வாடகைப்படி HRA உயர்ந்தது Reviewed by Rajarajan on 8.11.21 Rating: 5

கருத்துகள் இல்லை