தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை அமல்படுத்த திட்டம்
தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து மும்பைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள பிரபலமான நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மகாராஷ்டிரா நாலேஜ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற MKCL நிறுவனம் அம்மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படுகிறது. MKCL நிறுவனம் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிக்கல்வியில் தொழிற்படிப்புகள் மற்றும் டிஜிட்டல் கற்றலும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கல்வி முறையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அந்நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், MKCL நிறுவன அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை அமல்படுத்த திட்டம்
Reviewed by Rajarajan
on
29.10.19
Rating:
Reviewed by Rajarajan
on
29.10.19
Rating:


கருத்துகள் இல்லை