Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் வர இருப்பதாக தகவல்



பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண்பதற்காக பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் மதுரைக்கு வருகை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபரும் வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இது தொடர்பாக தங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் வர இருப்பதாக தகவல் ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் வர இருப்பதாக தகவல் Reviewed by Rajarajan on 29.10.19 Rating: 5

கருத்துகள் இல்லை