School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.10.19
திருக்குறள்
அதிகாரம்:வெகுளாமை
திருக்குறள்:306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
விளக்கம்:
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.
பழமொழி
No one knows another's burden.
எருதின் நோய் காக்கைக்கு தெரியுமா?
இரண்டொழுக்க பண்புகள்
1. நன்றி மறப்பது நன்று அன்று.
2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.
பொன்மொழி
உலகில் நீ காண விரும்பும் மாற்றம் ஆக நீ முதலில் இரு
—மகாத்மா காந்தி
பொது அறிவு
1.மனித உடலில் உள்ள மிகப்பெரிய தசை எது?
இதயத்தசை.
2.உடலில் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதில் முக்கிய காரணியாக விளங்கும் உணவு பொருள் எது ?
உப்பு
English words & meanings
Spermology - study of seeds. விதைகளை குறித்த படிப்பு
Secret - something which should not be known to others. இரகசியம்.
ஆரோக்ய வாழ்வு
கற்றாழை ஜெல்லை காயம் பட்ட இடத்தில் தடவினால் அது எரிச்சலை குறைத்து புண்களை சரிசெய்யும்.
Some important abbreviations for students
FAQ - frequently asked questions.
ASAP - As soon as possible
நீதிக்கதை
தாய்மையின் சக்தி
ஒரு மலைப்பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை. ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்திவிட்டார்கள். சமூகத்திலிருந்த பெரியவர்கள், இளைஞர்களிடம் மலைமேல் இருக்கும் சமூகத்தினரிடம் சமாதானமாகப் பேசினால் குழந்தையை மீட்டுவிடலாம் என்று அறிவுரை கூறினர். இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள்.
அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்கள் விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக முயற்சித்தனர். அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி? என்று கேட்டார்கள். அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம் என்று பதில் சொன்னாள்.
புதன்
கணக்கு & கையெழுத்து
கால்குலேட்டர் கணக்கு
கண்ணா : சுபேஷ் இந்த கால்குலேட்டர் ல உள்ள எல்லா எண்களையும் பெருக்கி வரும் விடைய சொல்லு..
சுபேஷ் : என்ன கண்ணா இவ்வளவு எண்களையும் பெருக்க எனக்கு நேரம் ஆகும் .. ஆனாலும் முயற்சி செய்கிறேன்...
கண்ணா : அரை நொடியில் விடையை சொல்லலாம் ..சரி மெதுவா சொல்லு...
சபேஷ் :: அரை நொடியிலா...!.!.
விடை: '0'
ஆம் ...இருக்கிற எண்களில் 0 ம் உண்டல்லவா ...
கையெழுத்துப்பயிற்சி - 17
இன்றைய செய்திகள்
29.10.19
*திருச்சி நடுக்காட்டிபட்டி ஆழ்துளை கிணற்றில் விழுந்து மாண்ட சிறுவன் சுர்ஜித் வில்சனுக்கு மக்கள் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.
*காற்றில் அதிக அளவில் கலந்துள்ள கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற ஒரு புதிய battery போன்ற அமைப்பு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது இது காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை அப்படியே உறிஞ்சும் தன்மை கொண்டது.
*டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசமாக பயணிக்கும் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கப்பட்டது.
*கோவிலுக்கு தேவைப்படாத நிலங்கள்.. ஏழை மக்களுக்கு பட்டா.. பரிசீலனையில் உள்ளதாக ஹைகோர்ட்டில் அரசு தகவல்.
*2019 உலகக் கோப்பையில், ஆல்-ரவுண்டராக அசத்திய ஷகிப்புக்குத் தடை அளிக்கப்பட உள்ளது, வங்கதேச அணிக்குப் பின்னடைவாக அமையும்.
*இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர்களுக்கு ஒப்பந்த முறையில் போட்டிகள் நடத்த முயற்சித்து வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
Today's Headlines
🌸Trichy Nadukattupatti people gave emotional farewell to the little angel Surjith Wilson who fell into a deep bore well pit and passed away.
🌸 A study has found out a new way of removing carbon dioxide from a stream of air that could prove as a significant tool in the battle against climate change. It is a big battery.
🌸 Now in Delhi the women can travel for free on public-run buses - this scheme started on Yesterday (Tuesday)
🌸 The lands which are not used by Temples can be given to poor people for free of cost. This is under discussion says TN government in High Court.
🌸 The cricket player Shahiff who Excel as all rounder In 2019 World Cup is going to be banned from cricket this may give step down to Bengal.
🌸 For the leading Indian cricket players there will be matches on the basis of Contracts says the Chairman of BCCI Mr. Ganguly.
Prepared by
Covai women ICT_போதிமரம்
School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.10.19
Reviewed by Rajarajan
on
29.10.19
Rating:
கருத்துகள் இல்லை