பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான இன்றைய கலந்தாய்வு செய்திகள்
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று காலை அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது. அதற்கான விரிவான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது இதற்கான சுழற்சி பட்டியல் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களை வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு விடிய விடிய நடைபெற்றுள்ளது. அதேபோல் இன்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான இன்றைய கலந்தாய்வு செய்திகள்
Reviewed by Rajarajan
on
12.11.19
Rating:

கருத்துகள் இல்லை