அங்கீகாரமின்றி செயல்படும் மெட்ரிக் பள்ளிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவு
தமிழ்நாட்டில் இயங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் பெறவேண்டும். இந்தாண்டு தொடர் அங்கீகாரம் பெறாமல் இயங்கிவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். மேலும் விரைவில் பள்ளிகள் அங்கீகாரம் பெற வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினர். ஆனாலும் பல பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன.
"பள்ளிக்கல்வித் துறையின் அரசாணை, வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகள் ஆகியவற்றின்படியும், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படியும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அரசின் அங்கீகாரமின்றி செயல்படக் கூடாது. துறை அனுமதியின்றி பள்ளி செயல்படுவது விதிகளுக்கு முரணான செயலாகும். அவ்வாறு பள்ளிகள் செயல்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டும். அதன்பின்னும் பள்ளிகள் செயல்பட்டால் நாள் ஒன்றுக்கு 10,000 ரூபாய் வீதம் அபராதமாக விதிக்க வழிவகையுள்ளது.
எனவே இது நாள் வரையில் தங்கள் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அப்பள்ளிகள் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால் துறை ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் அங்கீகாரத்திற்கான விண்ணப்பத்தினை முழு வடிவில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் அளிக்காமலிருந்தால் விதிகளைப் பின்பற்றி அப்பள்ளிகளை நிரந்தரமாக மூடி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும். அங்கீகாரம் பெறாமல் பள்ளி நடத்தும் உங்கள் மீது ஏன் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. அங்கீகாரம் பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாணவர் நலன் கருதி மேலும் காலம் தாழ்த்தாமல் பதிலளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
அங்கீகாரமின்றி செயல்படும் மெட்ரிக் பள்ளிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவு
Reviewed by Rajarajan
on
4.11.19
Rating:
கருத்துகள் இல்லை