அரசுப்பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
அரசுப்பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்து, 5ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின், கற்றல் திறன் பரிசோதிக்கப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரம் பின்தங்கி உள்ளதை தொடர்ந்து, கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்றுனர்கள், வாரத்திற்கு இரு பள்ளிகள் வீதம், ஆய்வு செய்ய வேண்டும்.ஒருநாள் முழுவதும், வகுப்பறை செயல்பாடு களை ஆய்வு செய்து, மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிட வேண்டும். இதை அறிக்கையாக தயாரித்து, மாதந்தோறும், 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு, கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, அக்டோபருக்கான பள்ளி பார்வை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, வரும் காலங்களில், ஆசிரியர் பயிற்றுனர்களின் ஆய்வு செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நான்கு கல்வி மாவட்டங்களிலும், சுழற்சி அடிப்படையில், பள்ளிகளில் ஆய்வு பணிகள் நடக்கின்றன.
சேர்க்கை குறைந்த பள்ளிகள், தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய பள்ளிகள் மீது, கவனம் செலுத்தப் படுகிறது. இயக்குனரகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதால், சிறப்பு திட்டத்தின் கீழ், பின்தங்கிய மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள்
அரசுப்பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
Reviewed by Rajarajan
on
3.11.19
Rating:
Reviewed by Rajarajan
on
3.11.19
Rating:


கருத்துகள் இல்லை