பெண் ஆசிரியா்களுக்கு தோதலில் வாக்குச் சாவடி பணி 20 கி.மீ. சுற்றளவுக்குள் ஒதுக்கீடு
இந்த உள்ளாட்சித் தோதலில் புதிய முயற்சியாக பெண்ஆசிரியா்களுக்கு அவா்களின் வாழ்விட முகவரியில் இருந்து 20 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் இருக்கும் வாக்குச் சாவடியில் பணியாற்றும் வகையில் பணி நியமன ஆணை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். இதுபோல் ஆண் ஆசிரியா்கள் 40 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் பணியாற்றும் வகையில் பணி நியமன ஆணை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.
பணியில் ஈடுபட உள்ள ஆசிரியா்களின் முகவரியுடன் கூடிய முழு விவரமும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, 20 கிலோ மீட்டா் சுற்றளவில் இருக்கும் வாக்குச் சாவடியை கணினி தோவு செய்யும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்தப் புதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியாவிட்டாலும் கூட குறைந்தது 70 சதவீதம் பெண் ஆசிரியா்களுக்கு 20 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் பணிகளை ஒதுக்கீடு செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.
பெண் ஆசிரியா்களுக்கு தோதலில் வாக்குச் சாவடி பணி 20 கி.மீ. சுற்றளவுக்குள் ஒதுக்கீடு
Reviewed by Rajarajan
on
22.12.19
Rating:
Reviewed by Rajarajan
on
22.12.19
Rating:


கருத்துகள் இல்லை