செய்முறை தேர்வு மையம் பள்ளிகளுக்கு நிபந்தனை
பிளஸ் 2வில் செய்முறை தேர்வு எழுத, குறைந்தபட்சம், 30 மாணவர்கள் இருந்தால் மட்டுமே, அதே பள்ளியில் தேர்வு மையம் செயல்படும்' என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் மார்ச், 2ல் துவங்குகிறது.
இந்த தேர்வுக்கான ஆயத்த பணிகளில் பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது. வினாத்தாள் தயாரிப்பு, தேர்வு மையம் ஒதுக்கீடு, மாணவர்களின் இறுதி பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில், செய்முறை தேர்வை இந்த மாத இறுதியில் இருந்து, பிப்ரவரி முதல் வாரத்திற்குள் முடிக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கான முன் ஏற்பாடாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், செய்முறை தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை திரட்ட, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அதேபோல, செய்முறை தேர்வுக்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட உள்ள, அக மதிப்பீட்டாளர் மற்றும் செய்முறை தேர்வு கண்காணிப்பாளரையும் இறுதி செய்து, பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு எழுத ஒரு பள்ளியில், ஒரு பாடப் பிரிவில் குறைந்தபட்சம், 30 மாணவர்கள் இருந்தால் மட்டுமே, அந்த பள்ளியில் செய்முறை தேர்வுக்கு மையம் அமைக்க வேண்டும். அதை விட குறைந்தால், அருகில் உள்ள பள்ளிகளில் செய்முறை தேர்வு மையம் அமைக்கப்படும் என்றும், நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு மையம் பள்ளிகளுக்கு நிபந்தனை
Reviewed by Rajarajan
on
28.12.19
Rating:
கருத்துகள் இல்லை