5, 8ம் வகுப்பு மாணவர் பட்டியல் பள்ளிகளுக்கு சி.இ.ஓ.,க்கள் உத்தரவு
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுக்கான மாணவர்கள் பட்டியலை தயாரிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என்ற, அனைவருக்கும் தேர்ச்சி முறை, 2019 வரை பின்பற்றப்பட்டு வந்தது. பல மாநிலங்களில் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, தேர்வுகளே நடத்தப்படாமல் இருந்தது. இதனால், மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக, ஆய்வுகளில் தெரியவந்தது.இதையடுத்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுவான ஒரு தேர்வை நடத்துவது குறித்து, மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என, மத்திய அரசு அறிவித்தது.இதில், பொதுவான தேர்வு என்பதற்கு பதிலாக, தமிழக அரசு பொது தேர்வாகவே நடத்துவோம் என, அறிவித்து உள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு, இந்த தேர்வு முதல்முறையாக நடத்தப்பட உள்ளது.
இது குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:அனைத்து பள்ளிகளிலும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர், பள்ளியின் விபரம் போன்றவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும்.
பொதுத்தேர்வு நடத்துவதற்கு, இந்த பட்டியலை பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5, 8ம் வகுப்பு மாணவர் பட்டியல் பள்ளிகளுக்கு சி.இ.ஓ.,க்கள் உத்தரவு
Reviewed by Rajarajan
on
30.12.19
Rating:
கருத்துகள் இல்லை