நுழைவு தேர்வை நீக்கினால் கல்வி சுகமானதாக மாறும்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:"தங்கள் ஆளுகைக்குள் இயங்கும் அனைத்து பள்ளிகளின் வளாகங்களும் கோபம் இல்லாத மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்றப்பட வேண்டும்" என மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி. கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நோக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்றாலும் கல்வி முறையை சுமையற்றதாக மாற்றாமல் இத்தகைய அலங்கார அணுகுமுறைகள் பயனளிக்காது.மலர்களாக கையாளப்பட வேண்டிய மாணவர்களை மனிதர்களாகக் கூட கையாளாமல் மதிப்பெண் இயந்திரங்களாக கையாளுவது தான் அனைத்துக்கும் காரணம். இந்த நிலையை மாற்ற வேண்டும். அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். கல்வியை சுகமானதாகவும் சுமையற்றதாகவும் மாற்ற வேண்டும். அதன் வாயிலாகவே பள்ளிகளை கோபம் இல்லாத மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்ற முடியும் என்பதை அரசுகள் உணர வேண்டும், என கூறியுள்ளார்.
நுழைவு தேர்வை நீக்கினால் கல்வி சுகமானதாக மாறும்
Reviewed by Rajarajan
on
30.12.19
Rating:
Teacher must be respected
பதிலளிநீக்கு