Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கல்வித்துறை கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம் ஆசிரியர்கள் முன்வைத்த கருத்துக்கள்




அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கல்வித்துறை கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

கல்வித்துறையை மேம்படுத்துவது தொடர்பாக திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் மதுரையில் நடந்தது.ஆசிரியர்கள் முன்வைத்த கருத்துக்கள்:நவீன பாடத்திட்டங்களை கையாளுவதால் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும். பயிற்சிகள் என்ற பெயரில் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் கற்பித்தல் பணி பாதிக்கிறது.

ஏனோதானோ என நடத்தாமல் அவசியம் கருதி பயன்அளிக்கும் வகையில் பயிற்சிகள் இருக்க வேண்டும்.மாணவர்களுக்கு இலவச சீருடைக்கு துணியாக வழங்கினால் உடல் அளவிற்கு ஏற்ப தைத்துக்கொள்ள முடியும். அனைத்து அரசுப்பள்ளிகளிலும் அடிப்படை வசதி உள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்தாலும், பல பள்ளிகளில் இல்லை என்பதே உண்மை. இதில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.ஆறு மாவட்டங்களின் சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.

மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஏற்பாடுகளை செய்தார்.கமிஷனருக்கு சத்துணவுஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சிஜி தாமஸ் ஊமச்சிகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில்இருந்து மாணவர்களுக்கு சமைத்த சத்துணவைகொண்டுவர சொல்லி மதிய உணவாக சாப்பிட்டார்.
கல்வித்துறை கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம் ஆசிரியர்கள் முன்வைத்த கருத்துக்கள் கல்வித்துறை கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம் ஆசிரியர்கள் முன்வைத்த கருத்துக்கள் Reviewed by Rajarajan on 18.12.19 Rating: 5

கருத்துகள் இல்லை