மாணவர்களின் பாதுகாப்புக்கான மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி எடுக்க வேண்டிய பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. அதில் பள்ளிகளின் சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பாதிப்புக்குள்ளான வகுப்பறைகளை பூட்டி வைக்க வேண்டும், மின் இணைப்புகளை சரிபார்த்துக்கொள்ள வேண்டும், பள்ளி வளாகத்திலுள்ள நீர்த்தேக்கங்கள், நீர்த்தேங்கியுள்ள பள்ளங்களை மூடி வைக்க வேண்டும், விடுமுறை தினங்களில் மாணவர்கள் ஏரி, குளங்களில் குளிப்பதை தவிர்க்க அறிவுரை வழங்க வேண்டும், இடி, மின்னலிலிருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பான அறிவுரைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பள்ளிக்கல்வித்துறையின் செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களின் பாதுகாப்புக்கான மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
Reviewed by Rajarajan
on
2.12.19
Rating:
கருத்துகள் இல்லை