Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

SBI ATM Users: இதைச் செய்யுங்க முதல்ல... இல்லைன்னா புத்தாண்டில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க முடியாது





பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? இந்த முக்கியமான தகவல் உங்களுக்குத்தான்! நீங்கள் வைத்திருக்கும் ‘டெபிட் கார்டு’ பழைய ‘மேக்னடிக் ஸ்ட்ரிப்’ வகையை சேர்ந்ததா? அதை மாற்றிக்கொள்ள கெடு கொடுக்கப்பட்டாகிவிட்டது. உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.

ஆன் லைன் பேங்கிங் ஃப்ராடுகளை தடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வணிக வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியிருக்கிறது. ஏடிஎம்.களில் பணம் எடுக்க பயன்படுத்தப்படும் பழைய ‘மேக்னடிக் ஸ்ட்ரிப்’ டெபிட் கார்டுகளை மாற்றிவிட்டு, பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்த இ.வி.எம். சிப் அடிப்படையிலான டெபிட் கார்டுக்கு மாறவேண்டும் என்பதே அந்த அறிவுறுத்தல்.

அதன்படி எஸ்.பி.ஐ. (ஸ்டேட் வங்கி) தனது வாடிக்கையாளர்கள் இந்த மாதம் (டிசம்பர் 2019) 31-ம் தேதிக்குள் பழைய மேக்னடிக் ஸ்ட்ரிப் டெபிட் கார்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறது. புத்தாண்டு முதல் (ஜனவரி 1) பழைய வகை டெபிட் கார்டுகளின் இயக்கம் நிறுத்தப்படும் என்றும் ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது.

ஸ்டேட் வங்கியின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை வாடிக்கையாளர்கள் உடனடியாக தெரிந்து செயல்படுத்திக் கொள்வது நல்லது. மீண்டும் ஞாபகப்படுத்துகிறோம்… பழைய மேக்னடிக் ஸ்ட்ரிப் டெபிட் கார்டு மூலமாக புத்தாண்டு முதல் பணம் எடுக்க முடியாது.

பழைய மேக்னடிக் ஸ்ட்ரிப் டெபிட் கார்டை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் கிடையாது.

ஸ்டேட் வங்கியின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை வாடிக்கையாளர்கள் உடனடியாக தெரிந்து செயல்படுத்திக் கொள்வது நல்லது.
SBI ATM Users: இதைச் செய்யுங்க முதல்ல... இல்லைன்னா புத்தாண்டில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க முடியாது SBI ATM Users: இதைச் செய்யுங்க முதல்ல... இல்லைன்னா புத்தாண்டில் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க முடியாது Reviewed by Rajarajan on 3.12.19 Rating: 5

கருத்துகள் இல்லை