Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

10ஆம் வகுப்பு - 2020 பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.23 முதல் வழங்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு.


Was

உதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் / அட்டவணை மதிப்பெண் பதிவேடு பெறப்பட்டவுடன் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளி | தனித் தேர்வர்களுக்கானதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.




 1. வேறு மாவட்டங்களுக்கான ஆவணங்கள் பெறப்பட்டிருப்பின் உடன் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் ( DD Admin.9283668198 & DD HS . 9444364577 )


2. அட்டவணை மதிப்பெண் பதிவேடுகள் கல்வி மாவட்ட வாரியாக | மையம் / பள்ளி வாரியாக அச்சிடப்பட்டுள்ளது.


3. உதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ் கட்டுகளைப் பெற்றவுடன் , ஒவ்வொரு பெட்டியிலும் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பெண் சான்றிதழ்களின் வரிசை எண்கள் சரியாக உள்ளதா என உறுதிசெய்து கொள்ள வேண்டும். 


4. ஒரு கல்வி மாவட்டத்திற்குரிய அனைத்து பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளனவா என உறுதிசெய்து கொண்டு அட்டவணைப் பணியினை தொடங்க வேண்டும் . இப்பணியில் கால தாமதம் எற்படக் கூடாது.


5. பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் ஏதும் இருப்பின் அதனை உடனுக்குடன் dgesslcb4section@gmail.com ( Reprint செய்வதற்கு ஏதுவாக ) என்ற மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.


6. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்குரிய அட்டவணைப் பணி முடிந்தவுடன் அப்பணியினை மேற்கொண்ட பணியாளர்களின் கையொப்பம் பெற வேண்டும்.


7. அட்டவணைப்பணி முடிவுற்றவுடன் ஒரு கல்வி மாவட்டத்திற்குரிய மதிப்பெண் சான்றிதழ்களுக்கான உறைகளை பள்ளி வாரியாக பட்டியலிட்டு அனைத்து பள்ளிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளதா ( மாற்றுத் திறனாளி படிவம் மொழிப்பாட விலக்கு மட்டும் ) என்பதை தலைமையலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பட்டியலுடன் உறுதி செய்து கொண்டு கட்டுகளாக கட்ட வேண்டும்.


8. மொழிப்பாடம் விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களின் சலுகையினை அட்டவணை மதிப்பெண் பதிவேட்டில் பதிந்து அப்படிவத்தில் உதவி இயக்குநர்கள் கையொப்பமிட்டு மதிப்பெண் சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டும்.


9. TMR Binding செய்யும் போது 250 பக்கங்கள் மிகாமல் தைக்க வேண்டும் . அதிக பக்கங்கள் கூடாது.


10. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பதிவெண் . / பள்ளி எண் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அட்டவணை மதிப்பெண் பதிவேட்டுடன் நேரடியாக இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.




மேற்குறிப்பிட்ட அனைத்து அறிவுரைகளையும் தவறாது கடைபிடிக்க தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பள்ளி மாணாக்கர் அனைவருக்கும் எவ்வித புகாருக்கும் இடமின்றி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவதை அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


10ஆம் வகுப்பு - 2020 பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.23 முதல் வழங்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு. 10ஆம் வகுப்பு - 2020 பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.23 முதல் வழங்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு. Reviewed by Rajarajan on 14.10.20 Rating: 5

கருத்துகள் இல்லை