மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர் ஜீவித்குமார் சாதனை
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முடிவுகள் வெளியாகின. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் தோ்வு முடிவுகள் www.ntanneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தோ்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தை நாடியதால், சிறிது நேரம் இணையதளம் முடங்கி பிறகு செயல்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் அரசு பள்ளிகள் மாணவர்களில் முதல் மாணவராக சாதனை படைத்துள்ளார்.
நாடு முழுவதும் 97,433 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்த 1.17 லட்சம் பேரில் 90 சதவீதத்தினா் தோ்வில் பங்கேற்றதாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர் ஜீவித்குமார் சாதனை
Reviewed by Rajarajan
on
17.10.20
Rating:

கருத்துகள் இல்லை