Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தொலைந்து போன பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை (TC, mark statement) திரும்ப பெறுவது எப்படி..???

 


தொலைந்து போன பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை (TC, mark statement) திரும்ப பெறுவது எப்படி..???


தவிர்க்க முடியாத சூழ்நிலையிலோ,


வீடு இடமாற்றம் செய்யும்போதோ, அல்லது பயணத்தின் போதோ நமது கவனக்குறைவினால், பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து விடலாம். அதனைத் திரும்ப பெறுவது எப்படி? என்று பார்ப்போம்.


முதலில்


1. காவல் நிலையத்தில் நேரில் சென்றோ அல்லது Online மூலமாக என்னென்ன? சான்றிதழ்கள் தொலைந்தது என்று குறிப்பிட்டு புகார் பதிவு செய்து ரசீது பெற வேண்டும்.


இரண்டாவதாக


2. அரசின் அங்கிகாரம் பெற்ற செய்தி தாளில் (எ.கா: வணக்கம் இந்தியா நாளிதழ் உட்பட) என்ன என்ன சான்றிதழ் தொலைந்ததோ அவை அனைத்தையும் குறிப்பிட்டு விளம்பரம் செய்ய வேண்டும்.


மூன்றாவதாக



3. மேல் குறிப்பிட்ட இரண்டையும் சேர்த்து தமிழக அரசின் இசேவை மையத்தில் என்னென்ன சான்றிதழ்கள் தொலைந்ததோ அவை அனைத்தையும் குறிப்பிட்டு பதிவு செய்து ரசீது பெற வேண்டும்.


நான்காம் நிலை


 4. கிராம அலுவலர் அதிகாரி அவர்களிடம் இசேவை மையத்தில் பதிந்த நகலுடன் இரண்டு ஜாமீன்தார்களும் (சாட்சிகள்) நேரில் சென்று பார்க்க வேண்டும்.


 ஐந்தாம்_நிலை


5. கிராம நிர்வாக அலுவலரை பார்த்த உடன் R.I-யை நேரில் சென்று பார்க்க வேண்டும்.


 ஆறாம்_நிலை


6. அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்த்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.


 ஏழாம்_நிலை 


7. வட்டாட்சியர் அலுவலகத்தில் தன் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ் போன்றவற்றிற்காக வரைவோலை (DD)எடுக்க வேண்டும்.


கடைசியாக 



8. இவை அனைத்திற்கும் தனித் தனி சான்றிதழ் பெற்று பள்ளி என்றால் கல்வி துறைக்கு அல்லது கல்லூரி என்றால் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.


பின்னர் அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் உங்கள் சான்றிதழ் உங்களுக்கு கிடைக்கும்.


தெரிந்து கொண்டதை தெரியப்படுத்துங்கள் யாருக்காவது பயனாகட்டும்.click here to download the form below link

தொலைந்து போன பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை (TC, mark statement) திரும்ப பெறுவது எப்படி..??? தொலைந்து போன பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை (TC, mark statement) திரும்ப பெறுவது எப்படி..??? Reviewed by Rajarajan on 27.10.20 Rating: 5

கருத்துகள் இல்லை