ஜன. 1 முதல் பள்ளிகள் திறப்பு – கேரளா அரசு முடிவு!!
Was
கேரளத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்க போவதாக அம்மாநிலத்தின் முதல்வர் விஜயன்
கூறியுள்ளார்.
கேரளத்தில் பள்ளிகள் திறப்பு:
கேரளாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. மார்ச் மாதம் நடக்கவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
இது பற்றி அம்மாநிலத்தின் முதல்வர் திரு.பினராயி விஜயன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் கூட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்த போவதாக கூறப்படுகிறது. மேலும், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நடக்கும் ஆன்லைன் வகுப்புக்கள் தொடர்ந்து நடத்தலாம். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆலோசனைகளும் மாதிரி தேர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
Reviewed by Rajarajan
on
17.12.20
Rating:


கருத்துகள் இல்லை