தமிழகத்தில் ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது எப்போது பள்ளிகள் திறக்கலாம் என கல்வித்துறை குழு சார்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி இந்த மாதம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் இருப்பதால் ஜனவரி 18 முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் என அரசு தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
 
        Reviewed by Rajarajan
        on 
        
23.12.20
 
        Rating: 

கருத்துகள் இல்லை