மே 4 முதல் CBSE பொதுத்தேர்வுகள் – மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
கொரோனா காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. இருப்பினும் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருந்த நிலையில், இன்று அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்து உள்ளார். இருப்பினும் தேர்வுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்படவில்லை. சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தேதியை டிசம்பர் 31 அன்று மாலை 6 மணி அளவில் தேதியை அறிவிப்பேன் என அமைச்சர் கூறி இருந்த நிலையில் இன்று நேரலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
கொரோனா காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் பொதுத்தேர்வு பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் 70% பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். தேர்வு வழக்கம் போல் ஆஃப்லைன் முறையில் நடைபெறும். தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 15ம் தேதிக்குள் வெளியிடப்படும்.
கருத்துகள் இல்லை