Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு- ஊதியப் பட்டியல் தயாரித்தல் சார்ந்த விளக்கம்- THANKS - MR.LAWRENCE- TRICHY


 தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு:

 தலைமை ஆசிரியர்கள்தங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடந்த மாத ஊதியப் பட்டியலிலிருந்துஇந்த மாத ஊதியப் பட்டியலில் எந்தெந்த இனங்களில்மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்ற விவரத்தைமேற்கண்ட படிவத்தில்  நிரப்பிஊதியப் பட்டியலுடன் இணைத்துத் தரும் போதுஇணைய தளத்தில் ஊதிய விவரங்களை பதிவேற்றம் செய்யும்அலுவலகப் பணியாளர்களுக்கும்ஊதியப் பட்டியலை சரி பார்த்து ஒப்புதல் அளிக்கும் அலுவலர்களுக்கும் எளிதாக இருக்கும் எனக் கருதப் படுகிறது.

இதன் மூலம் ஊதியப் பட்டியலில் கோரப்படும் ஊதியம்எவ்வித வித்தியாசமும் இன்றி உரிய தலைப்புகளில் சரியாக வரவு வைக்கப் படுவதுடன், (உதாரணமாக PF சந்தாவருமான வரி பிடித்தம் மற்றும் பிற...) ஆசிரியர்களின் வங்கிக் கணக்கிலும்ஊதியப் பட்டியலில் கோரப்பட்ட சரியான நிகரத் தொகை வரவு வைப்பது உறுதி செய்யப்படும் என எதிர் பார்க்கலாம்.

கணினி மூலம்தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியப் பட்டியல் தயாரிப்பவர்கள்இந்த மாத ஊதியப் பட்டியலில் மாற்றம் செய்யப் பட்டுள்ள ஊதியம் மற்றும் பிடித்தம் இனங்களின் விவரங்களை மட்டும் Bold செய்து காண்பிக்கலாம்.

 கடந்த மாத ஊதியம் / பிடித்தம் விவரங்களை Bold செய்ய வேண்டாம்.

இதற்காகவே Excel file அனுப்பப் பட்டுள்ளதுஇதிலேயே Edit செய்துபிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்)

கையினால் எழுதப்படும் ஊதியப் பட்டியல் தயாரிப்பவர்கள்கடந்த மாத ஊதியத்தில்  பெறப் பட்ட  இனங்களின் விவரங்களை ஊதா மையினாலும்இந்த மாத ஊதியப் பட்டியலில்செய்யப் பட்டுள்ள மாற்ற விவரங்களை மட்டும்சிவப்பு வண்ண மை கொண்டு எழுதலாம்.

மாற்றம் செய்யப் பட்ட இனங்களில்  கடந்த மாதம் பெற்ற / பிடித்தம் செய்யப் பட்ட தொகையை ஊதா மையினாலும்இந்த மாதம் பெற வேண்டிய ஊதியம் (ஆண்டு ஊதிய உயர்வுதேர்வு நிலை ஊதியம்சிறப்பு நிலை ஊதியம்ஊக்க ஊதியம்ஊதியமில்லா விடுப்பு நாட்கள்அரைச் சம்பள விடுப்பு ஊதியம் போன்ற மாற்றம் செய்யப் பட்ட விவரங்கள் மட்டும்) /

பிடித்தம் செய்யப் பட வேண்டிய தொகையையும் (PF சந்தாத் தொகை உயர்த்துதல்வருமான வரி பிடித்தம் உயர்த்துதல் மற்றும் சொசைட்டி பிடித்த மாற்றம் போன்றவைசிவப்பு நிற மையினாலும் எழுதிஊதியப் பட்டியலுடன் இணைத்து ஒப்படைத்தால்சம்பளப் பட்டியல் பதிவேற்றம் செய்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

கடந்த மற்றும் இந்த மாத ஊதிய விவரங்கள் அனைத்தையும் எழுத வேண்டிய அவசியமில்லை.


PAY BILL DIFFERENCE FORMATS LINKS- click here

தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு- ஊதியப் பட்டியல் தயாரித்தல் சார்ந்த விளக்கம்- THANKS - MR.LAWRENCE- TRICHY தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு- ஊதியப் பட்டியல் தயாரித்தல் சார்ந்த விளக்கம்- THANKS - MR.LAWRENCE- TRICHY Reviewed by Rajarajan on 9.12.20 Rating: 5

கருத்துகள் இல்லை