Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!!


தற்போது ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஜனவரி 31, 2021 நள்ளிரவு 12 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. நோய்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மேலும் சில தளர்வுகள் வழங்கப்படுகிறது. அவை

ஜனவரி 1 முதல் உள் அரங்கங்களில் முதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெற்று அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்களுடன் நடத்திக் கொள்ளலாம்.

சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளில் பணிபுரியும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு கிடையாது.

அனைத்து வழிபாட்டு தளங்களிலும் நேரக்கட்டுப்பாடு முறை தளர்த்தப்பட்டு, வழக்கமான நடைமுறையில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு தமிழகத்தினுள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை.

தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!! தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!! Reviewed by Rajarajan on 31.12.20 Rating: 5

கருத்துகள் இல்லை