விஜயதசமியன்று பள்ளிகளை திறந்து வைத்து மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு
விஜயதசமியன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கல்வி கற்றலை தொடங்கி வைக்க உகந்த நாளாக கருதுகிறார்கள்.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் 2,381 அங்கன்வாடிகளில் KG வகுப்புகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. எனவே அன்றைய தினம் பெற்றோர் 3 வயது பூர்த்தியடைந்த தங்கள் குழந்தைகளை அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் KG வகுப்பிலும், 5 வயது பூர்த்தியான குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் சேர்க்கலாம் என்றும், விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை ஏதும் இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
விஜயதசமியன்று பள்ளிகளை திறந்து வைத்து மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு
Reviewed by Rajarajan
on
5.10.19
Rating:
கருத்துகள் இல்லை