இயந்திரப் பொறியியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்க பெண்கள் முன்வர வேண்டும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இயந்திரப் பொறியியல் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கில் துணைவேந்தர் சுரப்பா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பயப்படும் அளவுக்கு இயந்திரப் பொறியியல் பாடப்பிரிவில் மிகப்பெரிய இயந்திரங்களைக் கையாளவோ அழுக்குக் கறை படிந்து வேலை செய்வோ தேவை இல்லை என்று கூறினார்.
முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலை செய்யும் வகையில் இயந்திரப் பொறியியல் துறை மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பெண்கள் இயந்திரப் பொறியியல் மற்றும் அது சார்ந்த துறைகளையும் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கேட்டுக்கொண்டார்.
இயந்திரப் பொறியியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்க பெண்கள் முன்வர வேண்டும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்
Reviewed by Rajarajan
on
15.10.19
Rating:

கருத்துகள் இல்லை