Jio Network Out Going கால்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது...
ஜியோ எண்ணிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 6 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. அதே சமயம் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு இணையாக, கூடுதல் இணைய டேட்டா வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.
ஜியோ சிம் செயல்பாட்டுக்கு வரும் வரை, ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட தொலை தொடர்பு சேவைகளை வழங்கிய நிறுவனங்கள் அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணம் வசூலித்தது. இந்த நிலையில், அனைத்து அவுட்கோயிங் கால்களும் இலவசம் என்ற அறிவிப்போடு ஜியோ களமிறங்கியது. அதேபோல இண்டெர்நெட் டேட்டாவுக்கும் சலுகைகளை வாரி வழங்கியது.
இந்த நிலையில், இன்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இன்று முதல் ரீசார்ஜ் செய்யும் அனைத்து ஜியோ வாடிக்கையாளரும், மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் போது நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், லேண்ட்லைனில் அழைக்கவோ, ஜியோ சிம்முக்கு அழைக்கவோ கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jio Network Out Going கால்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது...
Reviewed by Rajarajan
on
9.10.19
Rating:
கருத்துகள் இல்லை