10,12 வகுப்புகளுக்கு புதிய திருத்தம்! பாடங்களின் அளவைக் குறைத்து 2 முறை பொதுத் தேர்வு!
புதிய கல்விக் கொள்கையில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வுகளில் புதிய மாற்றம் செய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது. இதன்படி, ஆண்டின் இறுதியில் நடைபெறும் பொதுத் தேர்வு இனி பாதியாகப் பிரித்து 2 முறை நடத்தப்படும். முதல் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் 2-வது தேர்வில் சேர்த்து எழுத அனுமதிக்கப்படுவர்.
இதன்மூலம், ஒரே ஒரு இறுதித் தேர்வுக்காக இதுவரை பயின்று வந்த மாணவர்களின் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாடப்புத்தகங்களில் ஏற்கெனவே உள்ள பாடங்களின் அளவைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்கள் இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் வகையில் அமையும்.
.
10,12 வகுப்புகளுக்கு புதிய திருத்தம்! பாடங்களின் அளவைக் குறைத்து 2 முறை பொதுத் தேர்வு!
Reviewed by Rajarajan
on
1.11.19
Rating:
கருத்துகள் இல்லை